search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேக் லீச்"

    பல்லேகெலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கையை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரை 2-0 எனக்கைப்பற்றியது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்தது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து ஆடியது. அந்த அணி 346 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இலங்கைக்கு 301 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    301 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 75 ரன் தேவை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

    மேலும் 17 ரன் எடுப்பதற்குள் அந்த அணி எஞ்சிய 3 விக்கெட்டையும் எளிதில் இழந்தது. இலங்கை அணி 243 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் அதிகபட்சமாக 88 ரன் எடுத்தார். ஜேக் லீக் 5 விக்கெட்டும், மொயீன் அலி 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது சோகமே. ஏற்கனவே ஒரு நாள் தொடரையும் 1-3 என்ற கணக்கில் இழந்து இருந்தது. மேலும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகளும் மோதும் 3-ம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி கொழும்பில் தொடங்குகிறது.
    பல்லேகெலேயில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று பல்லேகெலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ரோரி பேர்ன்ஸ் (43), ஜோஸ் பட்லர், சாம் குர்ரான் (64) ஆகியோரின் ஆட்டத்தால் 75.4 ஓவரில் 290 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 19 ரன்னுடனும், புஷ்பகுமாரா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம்  தொடங்கியது. புஷ்பகுமாரா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருணாரத்னே உடன் தனஞ்ஜெயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. கருணாரத்னே 63 ரன்னிலும், டி சில்வா 59 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் மெண்டிஸ் 1 ரன்னிலும், மேத்யூஸ் 20 ரன்னிலும் வெளியேறினார்கள். 7-வது வீரராக களம் இறங்கிய ரோஷென் சில்வா 85 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 103 ஓவரில் 336 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. லீச் மற்றும் ரஷித் தலா மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.

    46 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்று ஒரேயொரு ஓவர் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து ரன் கணக்கையும் துவக்கவில்லை. விக்கெட்டும் இழக்கவில்லை.
    ×